KOLNews

இளையராஜா இசையில் மிஷ்கினின் துப்பறிவாளன் 2 படம்..!

இளையராஜாவுடன் பணியாற்றிய பல இயக்குனர்கள், தங்கள் படத்திற்கு பிற இசை அமைப்பாளர்கள் இசை அமைப்பதை பல மனசமாதானங்களோடு தான் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது சினிமா வட்டாரம் அறிந்த விஷயம் தான்.

இருப்பினும் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவை போல் இப்போதும் சிலர் இளையராஜாவின் இசை மட்டுமே தங்கள் கதைக்கு சிறந்த ஒன்றாக அமையும் என நினைக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் இயக்குனர் மிஷ்கினும் ஒருவர். 

பொதுவாக திரைப்படத்திற்கான இசையை எந்த இசையமைப்பாளர் அமைக்கவேண்டும் என முடிவெடுப்பது ஒரு இயக்குனரை மட்டும் வைத்து அமைவதில்லை. படத்தின் படஜெட், மற்றும் தயாரிப்பாளர் அல்லது நடிகரின் விருப்பம் போன்றவையும் காரணிகளாக உள்ளன.

தற்போதைய சூழலில், இயக்குனர் பாலா, மிஷ்கின் போன்றவர்கள் இளையராஜாவின் இசையை ஒரு பலமாக கருதுகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின், 2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார். அரோல் கரோலி என்கிற இசை அமைப்பாளர் இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது.  

Image result for thupparivaalan 2

இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இத்தகவலை விஷால் அறிவித்துள்ளார். திரையுலகில் 15-ம் ஆண்டில் அடியெடுத்தும் வைக்கும் நான், முதல்முறையாக இளையராஜா சார் இசையமைப்பில் நடிக்கிறேன்  என்று கூறியுள்ளார் விஷால். 

முன்னதாக, 2013-ல் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதற்கு முன்பு மிஷ்கின் இயக்கிய நந்தலாலாவுக்கும் தற்போது இயக்கி வரும் சைக்கோ படத்துக்கும் இளையராஜா தான் இசை. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம் என்பது மற்றொரு சிறப்பம்சம்.

English Summary

Ilayaraja music for Mishkin's 'Thuparivalan 2' movie ..!

Latest Articles

KOLNews