KOLNews

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள்..! - விவசாயிகளை வாழ்த்தும் நடிகர்கள் சூரியா மற்றும் கார்த்தி

ஏற்கனவே 'ஜெய் பீம்' திரைப்படம் மூலம் சமூகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கும் நடிகர் சூர்யா, தற்போது,  உறுதியாக இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .

முன்னதாக இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

 "உழவே தலை விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது . ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள் . மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது . உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்", என தெரிவித்துள்ளார் 

அதே போல நடிகர் சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தியும் , 

"மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

English Summary

In a democracy, the people are the masters ..! - Actors Surya and Karthi greet farmers

Latest Articles

KOLNews