KOLNews

எதிர்பார்ப்பில் ..நீனா குப்தாவின் சுயசரிதை..! - விவியன் ரிச்சர்ட்சுடனான உறவு குறித்தும் பேசுமாம்..!

நீனா குப்தா..பிரபல பாலிவுட் நடிகையான இவரை கடந்த தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆமாம், மேற்கிந்திய தீவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான  விவியன் ரிச்சர்ட்சுடன், அந்நாளில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ஒரு நாள் வெளிப்படையாக , ஆமாம், அவரின் குழந்தை என் வயிற்றி வளர்கிறது என வெளிப்படையாக கூறி கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில், தற்போது வரும் ஜூன் 14 ஆம் தேதி,அன்று நீனா குப்தா தன்  சுயசரிதையை  ‘சச் கஹூன் தோ’ என பெயரிட்டு வெளியிட உள்ளார். இந்தியாவின் பென்குயின் ரேண்டம் ஹவுஸால் வெளியிடப்படும். இந்த புத்தகம் நீனாவின் வாழ்க்கைக் கதையை, அவர்  தேசிய நாடகப் பள்ளியில் படித்த காலத்திலிருந்து துவங்கி, அவர் மும்பைக்குச் வந்தது, தனியொரு தாயக தன் மகளை வளர்த்தது ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தகத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்க மற்றொரு காரணம்  இதில் விவியன் ரிச்சர்ட்சுடனான தனது உறவைப் பற்றி நீனா குப்தா வெளிப்படையாக பகிர உள்ளார் என்பதே..!

எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி துணிவாகவும் வெளிப்படையாகவும் பேசும் நீனா குப்தா தனது முன்னாள் காதல் விவகார கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸுடனான தனது உறவு குறித்தும், விவியன் மற்றும் அவர்களது மகள் மசாபா குப்தா ஆகியோரின் பரஸ்பர மரியாதை குறித்தும் ஏற்கனவே ஒரு ஊடக பேட்டியில் தெரிவித்திருந்தார். 

When Neena Gupta gave her own example and advised female fans not fall in  love with married men: 'I have suffered' | Entertainment News - Hindustan  Times

அதில், விவியனை பற்றி எந்த விதமான விஷத்தையும் தன் மகள் மூளையில் தான் புகுத்துவதில்லை என்றும், அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நல்ல மதிப்பு வைத்துள்ளதாகவும், தான் எப்போதும் விவியனை நேசிப்பதாகவும், அவரை வெறுக்கவில்லை என்றும் கூறினார். அத்துடன் தனி தனியாக வாழ்ந்தாலும், நாம் விரும்பும் ஒருவரை எப்படி வெறுக்க முடியும் என கேள்வியும் எழுப்பியிருந்தார் நீனா குப்தா.

English Summary

In anticipation..Neena Gupta's autobiography ..! - Talk about your relationship with Vivian Richards ..!

Latest Articles

KOLNews