KOLNews

இரண்டாம் குத்து ..! - பாரதிராஜாவிற்கு இயக்குனர் பதில்

இரட்டை அர்த்த வசனங்கள் , அதீத கவர்ச்சி காட்சிகளை கொண்டு வெற்றி பெட்ரா 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் 2-ம் பாகமாக உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் குத்து’. இத்திரைப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ளார். அண்மையில், இதன் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி  சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. 

VIDEO] Arya unveils the teaser of Santosh Jayakumar's Irandam Kuthu

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா, இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அதில், 'பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் "இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார் பாரதிராஜா.

இந்நிலையில் பாரதிராஜாவின் விமர்சனத்திற்கு  பதிலளிக்கும் ‘வகையில் இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், “ அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். 1981-ம் ஆண்டு 'டிக் டிக் டிக்' படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்போது கூசிருச்சோ..?" என்று கூறி பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை  தனது பதிவில் இணைத்துள்ளார்.

English Summary

Irandaam kuthu ..! - Director's reply to Bharathiraja

Latest Articles

KOLNews