KOLNews

கடுப்பானாரா நயன்தாரா.? - அன்று அசின்..இன்று நிவேதா தாமஸ்.!

அண்மையில் வெளியான 'தர்பார்' திரைபடத்தில் தனக்கான பாத்திரதிற்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என நயன்தாரா அதிருப்தியில் உள்ளாராம். 

தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ், தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததுடன் அதிகம் பாராட்டப்படுகிறார்.

Image result for niveda thomas darbar

விமர்சனங்களில் நிவேதா தாமசே அதிகம் பாராட்டப்படுவதும், நயன்தாராவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாததும் நயன்தாராவின் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image result for niveda thomas darbar

கிட்ட தட்ட இதே மனநிலையில் தான் நயன்தாராவும் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குனர் முருகதாஸ் தனக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக நயன்தாரா நினைப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Image result for asin in ghajini

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் முருகதாஸ் இயக்கி, நடிகர் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்திலும் நடிகை அசினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நயன்தாரா கதாபாத்திரம் அடக்கி வாசிக்கப்பட்டிருந்தது. இரண்டாவதுமுறையும் தனது கதாபாத்திரம் பேசப்படாதது நயன்தாராவுக்கு முருகதாஸ் குறித்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட உண்மையும் அதுதான், என ரசிகர்களும் உணர்கிறார்கள்.

English Summary

Irritated Nayanthara. - Then Asin..Now Niveda Thomas!

Latest Articles

KOLNews