KOLNews

தனிமைப்படுத்தி கொண்டேன்..! - கொரோனா பாதிப்பில் ரகுல் ப்ரீத் சிங் ..!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் புது வகை வேறு பரவி வருவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி திரைபடங்களில்   கதாநாயகியாக நடித்துவரும் ரகுல் ப்ரீத் சிங். அண்மையில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பி, மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்ல தயாரான நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு  உறுதியாகி உள்ளது. 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், 

"எனக்கு  பரிசோதனையில் கொரோனா பாதிப்பு  உறுதியாகி உள்ளது.என்னை நான் தனிமை படுத்தி கொண்டேன். நான் நன்றாக உள்ளேன்.  நான் ஓய்வுக்கு பிறகு விரைவில் நலமுடன் திரும்புவேன். தயவு செய்து என்னை சந்தித்தவர்கள், தாங்களும் பரிசோதனை செய்து கொள்ளவும். நன்றி அனைவரும் நலமுடன் பாதுகாப்பாக இருங்கள்",  என தெரிவித்துள்ளார்.

தமிழில் தடையற தாக்க , தீரன், தேவ்,மற்றும் என்.ஜி.கே படங்களில் நடித்தா ரகுல் ப்ரீத் சிங். தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English Summary

Isolated ..! - Ragul Preet Singh affected by Corona ..!

Latest Articles

KOLNews