KOLNews

ஜெயம் ரவி..! - வெற்றி பயணம்

நடிகர் ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள்..

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த  இவரது தந்தை மோகன், பிரபல பட எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் என்பதும், இவரது சகோதரர் பிரபல இயக்குனர் ராஜா என்பதும் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே 

கடந்த 2003ல் இவரது தந்தையார் மோகன் அவர்கள் தயாரிப்பில் சகோதரர் ராஜா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் படத்தில் நாயகனாக அறிமுகமாகி,  தொடர்ந்து M. குமரன் s/o. மகாலட்சுமி,   தாஸ் , மழை , என பல படங்கள் நடித்ததுடன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியன்,   பேராண்மை, தனிஒருவன், கோமாளி, போன்ற வெற்றிப்படங்களால் தொடர்ந்து தமிழ் திரை ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Thani Oruvan Pics | Thani Oruvan Photos | Thani Oruvan Portfolio Pics |  Thani Oruvan Personal Photos - ETimes Photogallery

ஜெயம் ரவி  நடிக்க வருவதற்கு முன்  இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்த #ஆளவந்தான் படத்தில்  உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. . 

தமிழ் திரை நாயகர்களில் தனக்கு இருக்கும் 'சாக்லேட் பாய்' பிம்பத்தை மீறி புது முயற்சிகளை அவ்வப்போது எடுத்துவரும்  நடிகர் ஜெயம்ரவி மேலும் பல வெற்றிகளை பெற அவர் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்துவோம் 

English Summary

Jayam Ravi ..! - Journey to success

Latest Articles

KOLNews