KOLNews

ஒண்ணு கூடிட்டாங்கய்யா.. ஒண்ணு கூடிட்டாங்கய்யா.. ! - மிஷ்கின்..சிம்புவுடன்..வடிவேலு..!

‘சைக்கோ' படத்தின்  வெற்றி,  மிஷ்கினுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. 

இந்நிலையில்,  நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து வெளியேறிய மிஷ்கின் தற்போது சிம்புவுடன் கைகோர்க்கிறார்.

சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு' திரைபடத்தில் நடித்து வருவதால், அதன் படப்பிடிப்பு முடித்த கையோடு மிஷ்கின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சிம்பு-மிஷ்கின் கூட்டணி திரைப்படத்தில் ‘வைகைப் புயல்' வடிவேலு ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

சிம்பு, வடிவேலு, மிஷ்கின் என மூவருமே அவரவர் தளத்தில் திறமையானவர்கள் , தனித்தன்மை கொண்டவர்கள். ஆகையால் இந்த கூட்டணி புதுமையான ஒரு கதை களத்தில் அசத்தும் என கோலிவுட்டில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது..

English Summary

Joined together .! - Vadivelu with Myskin and simbu..!

Latest Articles

KOLNews