KOLNews

விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் மோதும் கார்த்தி..! - வெளியானது "கைதி" பட ட்ரைலர்

ஆயுத பூஜை தினமான திங்களன்று கார்த்தி நடித்துள்ள "கைதி" படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது, அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 'மாநகரம்' படத்தை இயக்கி, அதிகம் பேசப்பட்ட இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் . இவர் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் கைதி படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் முதலில் டீசரானது மே மாதம் 31-ஆம் தேதி வெளியானது.  தற்போது ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் கதாநாயகி இல்லாததும்  முற்றிலும் இரவுக்காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளதும் இப்படத்தின் சிறப்பாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் விஜய் நடித்த பிகில்,  விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் ஆகிய படங்களுடன் போட்டியிடும் சூழலில் உள்ளது கார்த்தி நடித்துள்ள 'கைதி' திரைப்படம். 

English Summary

Karthi to fight Vijay and Vijay Sethupathi - Released "Kaithi" movie trailer

Latest Articles

KOLNews