KOLNews

மிஸ்கின் படத்திற்கு இசை அமைக்கிறார் கார்த்திக் ராஜா..!

இயக்குனர் மிஷ்கின், தனது வெற்றி படமான 'சைக்கோ' படத்திற்கு பின், விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கி வந்த நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார். 

இந்நிலையில் இயக்குனர் நடிகர் அருண் விஜயு டன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும்,  அதன் பிறகு சிம்பு நடிப்பில் ஒரு ஆக்ஷன் படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் அந்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.

Karthik Raja is set to compose music for Rockford Entertainment's

இந்நிலையில்,  அண்மையில் தனது பிறந்த நாளன்று பிசாசு 2  படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் மிஸ்கின். ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்த நிலையில், தற்போது இந்த படத்துக்கு இசை அமைப்பாளராக கார்த்திக் ராஜாவை வைத்து இசை பணிகள் தொடங்கியுள்ளார் மிஸ்கின். அதனை உறுதிப்படுத்தும் வகையில்,  கார்த்திக் ராஜாவோட தான்  இணைந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மிஸ்கின். 

English Summary

Karthik Raja sets music for Myskin movie ..!

Latest Articles

KOLNews