KOLNews

லட்சக்கணக்கானோர் பாராட்டுதலில் 'கொகொநிகா'..! - மகிழ்ச்சி கடலில் நடிகர் ஷாந்தனு

நடிகர் சாந்தனு தான் இயக்கி நடித்த 'கொஞ்சம் கொரோனா நிறைய காதல்' என்ற குறும்படத்தை வெளியிட்டிருந்தார்.

வீட்டில் அனைத்து நேரங்களிலும் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் பாரத்தைக் குறைக்க ஆண்கள் முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் வந்திருக்கும் இக்குறும்படத்தின் ஒளிப்பதிவை,அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் யுவஸ்ரீ என்பவரே செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்குள்ளேயே ஐபோனை கொண்டு  எடுக்கப்பட்ட இக்குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் ஷாந்தனு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 

கன்னிமுயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, DADSON Pictures என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து (KOCONAKA) “கொஞ்சம் கொரோனா நெறைய காதல்” அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை (16.05.2020) மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) வெளியிட்டேன் (லேசான ஷிவரிங்குடன்).

ஆனா அது உங்க பேராதரவுனாலயும் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் பேராதரவுனாலயும் ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் குடுத்துருச்சு. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க.  கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்” 

என கூறியுள்ளார் சாந்தனு.

English Summary

'Kokonika' in praise of millions ..! - Shantanu in the sea of happiness

Latest Articles

KOLNews