KOLNews

கோட்டை முனி..! - திரைபடமாகும் மற்றொரு உண்மை சம்பவம்..!

சினிமாவுக்கென கதை எழுதிய காலம் போய், பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள், சமூகத்தில் நடத்த உண்மை சம்பவங்கள் ஆகியவற்றை கொண்டு திரைக்கதை அமைக்க தமிழ் சினிமா தயாராகிவிட்டது. 

அந்த வகையில், 1980 களில் ராமேஸ்வரம் , தனுஷ்கோடி பகுதிகளில் வாழ்ந்த கோட்டை முனி என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு 'கோட்டைமுனி; என்கிற படத்தை ட்ரீம் லைட் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூர் என்.ஹபீப் தயாரித்து வருகிறார். 

மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தை புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை , திரைக்கதை , வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் . படத்தில் இலங்கை மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்கள் திரைக்கதையில் சுவாரசியத்தை கூடும் என சொல்லப்படுகிறது.

R K Suresh is Vikram's villain - Tamil Nadu News, Chennai News, Tamil  Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai,  Petrol and Diesel Rate in Chennai

கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார் . அருந்ததி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார் . இவர்களுடன்  நிழல்கள் ரவி , சச்சு , தாமு , முத்துராமன் முத்துக்காளை , திருமுருகன் , உள்பட பலர் நடிக்கின்றனர் . ஏ.எம் . எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவில் , எம்.எஸ்.பாண்டியன் இசையமைக்கும் இப்படம் , அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தியேட்டர்களில் வெளியிட திட்டமிடபட்டுள்ளதாக தெரிகிறது.

English Summary

Kottai Muni ..! - Movie on another true incident ..!

Latest Articles

KOLNews