KOLNews

திரைப்படமாக உருவாகிறது..! - ஓட்டல் அதிபருக்கு எதிரான ஜீவஜோதியின் போராட்டம்..!

தமிழ் நாட்டை உலுக்கிய பிரபல ஓட்டல் அதிபர் ராஜகோபாலை சிறையில் தள்ளிய வழக்கு.தற்போது திரைப்படமாக உள்ளது. 

நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவஜோதி , இவரது கணவரின் கொலை வழக்கில் சரவண பவன் உணவக உரிமையாளர் மறைத்த ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே..! 

SC confirms life sentence for Saravana Bhavan hotel owner - News Today |  First with the news

 2019 ஜூலை மாதம் ராஜகோபால் காலமானார்,  ஜீவஜோதி , தஞ்சாவூரில் வசித்து வருகிறார் தண்டபாணி என்பவரை திருமணம் செய்துள்ள இவருக்கு பலின் என்கிற மகள் உள்ளார் . தையல் மற்றும் உணவகம் ஆகிய தொழில்களில் ஜீவஜோதி ஈடுபட்டு வருகிறார் . அண்மையில் ஜீவஜோதி , தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு, தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார் . 

இந்நிலையில் ராஜகோபாலுக்கு எதிரான ஜீவஜோதியின் 18 வருடப் போராட்டம் திரைப்படமாகவுள்ளது.  மும்பை நிறுவனமான ஜங்லீ பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க, ஜீவஜோதி வேடத்தில் நடிக்கும் நடிகை உள்ளிட்ட படக்குழுவினரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது .

 இது குறித்து  ஜீவஜோதி கூறுகையில்,  உணவக உரிமையாளருக்கு எதிரான , 18 வருடங்களாக நடைபெற்ற என்றுடைய சட்டபூர்வமான , உணர்வுபூர்வமான போராட்டம் பற்றி படம் எடுக்க ஜங்க பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்தது . மகிழ்ச்சியாக உள்ளதாகவும், . இந்தப் படத்தைத் திரையில் பார்க்கும்போது, தற்போது நிலவும் ஆணாதிக்க முறையில் மாற்றம் ஏற்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

English Summary

Making a movie ..! - Jeevajothi's struggle against the hotel owner ..!

Latest Articles

KOLNews