KOLNews

வெளியானது 'மாஸ்டர்' படத்தின் 'பர்ஸ்ட் லுக்'

நடிகர் விஜய் நடித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் வரும் படம் தற்காலிகமாக 'தளபதி 64' என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் கடந்த சனிக்கிழமையினன்று அறிவித்திருந்தனர்.

அதன்படி நடிகர் விஜய்யின் 64-ஆவது படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் வெளியாகியுள்ளது. 'மாஸ்டர்' என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. 

முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த கைதி திரைப்படம் பெரியளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இப்படத்தில், விஜயுடன் ,விஜய்சேதுபதி இணைந்திருப்பதும், அனிருத் இசையும் கூடுதல் ஆர்வத்தை விஜய் ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

English Summary

'Master' first look released

Latest Articles

KOLNews