KOLNews

மாஸ்டர் பட விழா..! - ரசிகர்களை தவிர்க்க என்ன காரணம்..?

அண்மை காலமாக நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் சம்பத்தப்பட்ட அணைத்து விழாக்களுமே ஏதோ ஒரு வகையில் பேசப்படும் விஷயமாகி வருகிறது. 

கடைசியாக வெளி வந்த பிகில் பாடல் விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த போது கிட்டத்தட்ட  4 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை தொடர்ந்து  மோதல் ஏற்பட்டு போலீசார் லேசான தடியடி நடத்திய சம்பவம் ஏற்பட்டது.

Image result for master audio launch

இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் விதமாக  மாஸ்டர் பட விழாவை ரசிகர்களை அழைக்காமல் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விழா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த முடிவுக்கு போலீசார் மற்றும் அரசிடம் அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்களை மனதில் வைத்து தான் விழாவை நட்சத்திர ஓட்டலில் நடத்துவதாக கூறப்படுவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஏற்கனவே மாநகரம், கைதி படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள "மாஸ்டர்" திரைப்படம் படம் அடுத்த மாதம் 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் உள்ளனர்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 15-ந்தேதி அன்று, முக்கிய பிரபலங்கள், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட 500 பேரை மட்டுமே அழைத்து நட்சத்திர ஓட்டலில் நடத்த முடிவு செய்து இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும், கொரோன வைரஸ் பீதி அடங்காத நிலையில், இது போன்று ஒரே இடத்தில அதிகளவில் ரசிகர்கள் கூடுவதை தவிர்ப்பதே ரசிகர்களுக்கும் நல்லது என படக்குழுவினர் சிலர் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது.

English Summary

Master Picture Festival ..! - What's the reason to avoid the fans?

Latest Articles

KOLNews