KOLNews

தியேட்டரில் தான் 'மாஸ்டர்' வெளியாகும் ..! - ரசிகர்களுக்காக நம்பும் விஜய்..!

கொரோனா தாக்கத்தின் காரணமாக அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் திரையரங்குகள் மூடியே உள்ள நிலை தொடர்கிறது. இதன் காரணமாக படத்தயாரிப்பு முடிந்து நிலையிலும் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படாமல் உள்ளது. 

பெரிய அளவில் முதலீடு செய்த படங்கள், மாதக்கணக்கில் திரையரங்குகள் மூடியிருப்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட ஓடிடி தளத்தில் தங்கள் திரைப்படங்களை வெளியிட தயாராகி விட்டன. குறிப்பாக சூர்யா போன்ற பெரிய நடிகர் நடித்த 'சூரரைப்போற்று' படம் அமேசான்பிரைம் ஓடிடி தளத்தில், அக்டோபர் 30 அன்று வெளியாக உள்ளது. அதேபோல் விஜய்சேதுபதி நடித்துள்ள க/பெ.ரணசிங்கம் படமும் ஓடிடி தளத்தில்  வெளியாக உள்ளது. தொடர்ந்து  பல படங்களும் இந்த வரிசையில் காத்திருக்கின்றன. 

Vijay Sethupathi Vijay Master Movie Third Look Wallpaper HD | New Movie  Posters

இதற்கிடையே  விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் அதை மறுத்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'மாஸ்டர் படம் ஓடி இடையில் வெளியாவதற்கு வாய்ப்பேயில்லை திரையரங்கில் தான் வெளியாகும் திரையரங்குகளில் என்றைக்கு திறக்கப்படுகிறது அதன்பிறகு மாஸ்டர் பட வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகும்' என தெரிவித்துள்ளார். 

இயக்குனரின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்திஇருந்தாலும், திரையரங்குகள் திறக்கப்பட்டாலும்  சமூக இடைவெளியுடன் தான் ரசிகர்கள் உட்கார்ந்து பார்க்கப்படும் சூழ்நிலை நிலவும்  என்பதால், பாதி எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் அதனால் வசூல் குறையும் என பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். 

எது எப்படி இருப்பினும் தனது ரசிகர்கள் சந்தோஷத்திற்காக எந்த விதத்திலும் மன சமாதானம் செய்து கொள்ளாத நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக படக்குழு வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

English Summary

'Master' will be released only in theaters ..! - Vijay believes his fans ..!

Latest Articles

KOLNews