KOLNews

‘மாஸ்டர்’ க்கு வந்த சோதனை ..! - இணை தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் ரெய்டு..!

விஜய் நடித்து அடுத்து வெளி வர உள்ள 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். 

ஏற்கனவே,  ‘பிகில்’ திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக வந்த செய்திகளை தொடர்ந்து சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தது தெரிந்ததே...

அதையடுத்து, நடிகா் விஜய்யின் ஆடிட்டா் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவில் ஆஜரானதுடன், பிகில் பட ஒப்பந்தம் பற்றி அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட ஏஜிஎஸ் குழும நிர்வாகிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விளக்கம் அளித்தார்கள். 

இந்நிலையில், நேற்று மாலை முதல் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மாஸ்டர் படத்தின் வியாபாரம் குறித்து லலித் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வரும் ஞாயிறன்று மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ள நிலையில் இந்த வருமானவரிச் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

English Summary

'Master's Co-producer's house, offices in raid ..!

Latest Articles

KOLNews