KOLNews

ஆளை மாற்றி இரங்கல் தெரிவித்த வலைதளவாசி..! - கடுப்பான நடிகர் சித்தார்த்

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்'  திரைபடம்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் சித்தார்த், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

திரைப்படங்களில் நடிகராக இருந்தாலும், அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளில் தன கருத்தை சமூக வலைத்தளம் மூலமாக வெளிப்படுத்தி வரும் நடிகர் சித்தார்த்துக்கு பாராட்டுகளுடன் கடுமையான விமர்சனகளும் வருவதுண்டு.

இந் நிலையில் நேற்று ஹிந்தி பிக்பாஸ்  பிரபலம் மற்றும் நடிகர் சித்தார்த் சுக்லா என்ற நடிகர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.  அதையடுத்து ரசிகர் ஒருவர் தமிழ் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்தார் . 

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள சித்தார்த் . இது திட்டமிடப்பட்ட ஒருவரை குறி வைத்து செய்யப்படும் வெறுப்பு மற்றும் தன் முத்துதல் ஆகும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

பல சந்தர்ப்பங்களில், ஆளும் மத்திய அரசின் நடவடிக்கைகளை  சித்தார்த் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Netisan who wrongly condoles..! - Actor Siddharth who get irritated

Latest Articles

KOLNews