KOLNews

இனி, இவர் இயக்குநர்..! - களம் இறங்கும் கனிகா.!

'வரலாறு' திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்தவர்  நடிகை கனிகா. 

 'ஃபவ் ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில், எதிரி, ஆட்டோகிராஃப், போன்ற என மிக சொற்பமான படங்களிலேயே நடித்தார்.

Image result for kanika hot

ஆனால் அவர் திறமையை மலையாள திரை உலகம் நன்றாக பயன்படுத்திக்கொண்டது. தமிழில் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 6 வருட இடைவெளி விட்டு, மீண்டும் தற்போது தமிழில் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அத்துடன், விக்ரமின் ‘கோப்ரா' திரைப்படத்திலும் குணச்சித்திர பாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தற்போது நடிகை கனிகா ஒரு குறும்படத்தின் வாயிலாக இயக்குநராக களம் இறங்குகிறார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “முதல் முறையாக கேமராவுக்குப் பின்னால் நிற்கிறேன், சினிமா ஒரு கடல் போன்றது என்று நான் எப்போதும் உணர்கிறேன். ஒரு கலைஞருக்கு ஆராய்ந்து பிரகாசிக்கக் கற்றுக்கொள்ளப் பல விஷயங்கள் சினிமாவில் உள்ளன. எனக்குள் இருக்கும் கற்கும் ஆர்வம் முதல் முறையாக இயக்க முயற்சிக்க விரும்பியது. என் இதயத்திற்கு மிக நெருக்கமான ஒரு கருப்பொருளில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளேன். அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது” என்று ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். 

அதையடுத்து, அவரின் புதிய முயற்சிக்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

English Summary

Now, She is the director ..! - Into field.. Kanika.!

Latest Articles

KOLNews