KOLNews

என் குரு ரஜினியால் மட்டுமே அது முடியும்..! - ரஜினி ரசிகர்களை குளிர வைக்கும் லாகவா லாரன்ஸ்..!

நடிகர் ரஜினிகாந்தின் ஒரு தீவீர ரசிகர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே.., இந்நிலையில்,  இந்தியாவிலேயே எதிர்மறை இல்லாமல் யாரையும் காயப்படுத்தாமல் கட்சி தொடங்க முடியும் என்றால் அது ரஜினிகாந்தாக மட்டுமே இருக்க முடியும் என தனது குருவை மீண்டும் தூக்கி பிடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,  தான் செய்யும் சேவைகளை வைத்து , நீங்கள் அரசியலில் இறங்குவதற்காக செய்கிறீர்களா என பல நண்பர்கள், ஊடகத்தினர் உட்பட சில  அரசியல்வாதிகலும் தன்னிடம் கேட்பதாகவும்,   நீங்கள் அரசியலுக்கு வந்தால் இதை விட அதிகமான சேவைகள் செய்யமுடியும் என சிலர் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன், தான் தனிமனிதனாக தற்போது செய்யும் சேவைகளை விட  அரசியலில் இருந்தால் இன்னும் அதிக சேவைகள் செய்ய முடியும். ஆனால் எதிர்மறை அரசியல் தனக்கு பிடிக்காது என தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ் , 'எதிர்மறை இல்லாமல் யாரையும் காயப்படுத்தாமல் கட்சி ஆரம்பிக்க முடியும் என்றால் அது என்னுடைய குரு ரஜினிகாந்த் ஆகத்தான் இருக்கும். அவர் இதுவரை யாரையும் காயப்படுத்தவில்லை அது அரசியல் காரணமாக இருந்தாலும் அவர் காயப்படுத்தியது இல்லை. அவர் கட்சி ஆரம்பித்தால் யாரையும் காயப்படுத்த மாட்டார் என நான் உறுதியாக நம்புகிறேன். ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல்  தொடங்கினால் அவருடைய பல லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன்'  என தெரிவித்து ரஜினி ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளார்.

English Summary

Only my guru Rajini can do that ..! - Lagawa Lawrence to keep Rajini fans cool ..!

Latest Articles

KOLNews