KOLNews

பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி..! - பிரபல நட்சத்திரங்கள் உதவிக்கரம்..!

கொரனா பீதியையடுத்து தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு கைகொடுக்கும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். 

முன்னதாக, படப்பிடிப்புகள் பலவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்  பட தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என நடிகர் நடிகைகளுக்கு பெப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

Image result for sivakumar surya and karthi

அதையடுத்து முதலில் நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களை தொடர்ந்து நடிகர் பார்தீபன் 25 கிலோ எடைகொண்ட 150 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.

Image result for partheeban

அதே போல இயக்குனர் மனோ பாலா 10 மூட்டை  அரிசி வழங்கி உள்ளார். 

Image result for sivakarthikeyan

அதையடுத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன்,  பெப்சி அமைப்புகு தன் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கி உள்ளார்.  மேலும் பல நடிகர்கள், பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்க முன்வருவார்கள் என தெரிகிறது.

English Summary

Pepsi workers financed - Famous Stars Help!

Latest Articles

KOLNews