KOLNews

உதவுங்கள் சோனு சூட் ..! -கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் தொடர் மெசேஜ் ..!

தனது சமூக சேவைகள் மூலம் அதிகம் பேசப்பட்டவர் நடிகர் சோனு சூட். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், அவரிடம் ஏராளமானோர் உதவி கேட்டு குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனராம். இது குறித்த வீடியோவை அவரே தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக கொரோனா முதல் அலையின் போது தவித்த  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான பல உதவிகளை நடிகர் சோனு சூட் செய்தார். அந்த தொழிலாளர்களுக்காக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ள நடிகர் சோனு சூட், கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதனை பாராட்டி அவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அவர் உருவத்தை விமானத்தில் பதித்து கவுரவித்திருந்தது. 

இந்நிலையில் தொடர்ந்து உதவி கேட்டு, தனக்கு ஏராளமான அழைப்புகள் வருவதாக சில நாட்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார். குறிப்பாக ’இந்தியா முழுவதும் இருந்து மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், ஊசிகள் என ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பலருக்கு என்னால் உதவ முடியவில்லை. தயவு செய்து வீட்டில் இருங்கள். முகக் கவசம் அணியுங்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே கொரோனாவிலிருந்து மீண்டுள்ள சோனு சூட், 

இந்நிலையில், தனது செல்போனுக்கு உதவிகள் கேட்டு வரும் மெசேஜ்களுக்கு  ‘உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். அதில் தாமதமோ, தொடர்பு கொள்ள இயலாத நிலையோ ஏற்பட்டால் மன்னித்துக் கொள்ளுங்கள்'  என தெரிவித்து ட்விட்டர் பதிவினை இட்டுள்ளார்.

English Summary

Please help Sonu Sood ..! - Continuous message of corona victims ..!

Latest Articles

KOLNews