நடிகை சுருதிஹாசன் மக்களில் பலர் கொரோனா அச்சமின்றி முன்னெச்சரிக்கை இன்றி இருப்பதை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
ஊரடங்குக்கு பின் எல்லோருக்கும் சுத்தமாக கொரோனா பயம் போய் விட்டது. யாருமே கொரோனாவை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இப்போது தான் ஊரடங்கில் இருந்து வெளியே வந்து இருக்கிறோம். இந்த நேரத்தில் மறுபடியும் இன்னொரு ஊரடங்கை சந்திக்க யாரும் தயாராக இல்லை. ஆகவே எல்லோரும் கவனமாக இருங்கள்.
கொரோனா தொற்று என்பது சாதாரணமான சளியோ, இருமலோ, காய்ச்சலோ வந்து போகிற மாதிரி கிடையாது. அது எவ்வளவு தீவிரமான நோய் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து பாதுகாப்பான முன் எச்சரிக்கையோடு வெளியே வாருங்கள். ஒரு வேளை கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் அதை மறைக்காமல் எல்லோருக்கும் சொல்லுங்கள். இதனால் தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். யாருக்கும் இடையூறாக இருக்காதீர்கள். எல்லோருடைய ஒத்துழைப்பின் மூலம்தான் கொரோனாவை வெல்ல முடியும்.
என தெரிவித்துள்ளார் சுருதிஹாசன்.
English Summary
Please understand ..! - Surudihasan begging the people.!