KOLNews

'போஸ்டர்' ஒட்டும் இயக்குநர் மிஷ்கின்..! - கலைக்கு செய்த மரியாதை

நல்ல தரத்துடன் கூடிய திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றை மனம் திறந்து பாராட்டுவதும், அவர்களுக்கு கடிதம் எழுதுவதும் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரிடம் இருந்த தனிபெருங்குணம்.

Image result for myskin director

தற்போதைய காலகட்டத்தில் நல்ல படங்களை பார்க்கும் போது உணர்ச்சிவசப்பட்டு பேசும் குணமுடையவராக  இயக்குநர் மிஷ்கின் பேசப்படுகிறார். அதற்கு காரணம் சமீபத்தில் இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படமான  'பாரம்'  படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய மிஷ்கின், 'தம்பி ராம் படம் பார்க்க கூப்பிட்டான், நானும் நல்ல தலைவலியோட தான் படம் பார்க்க போனேன். ஆனா படம் பார்க்க ஆரமச்ச கொஞ்ச நேரத்துல என்னோட தலைவலி விட்ருச்சு', என்று கூறினார். 

Image result for baram movie

அத்துடன், பாரம் படத்தையும், அந்த படத்தின் இயக்குநரையும் பெரிய அளவில் பாராட்டிய பேசிய மிஷ்கின், இந்த படம் சைக்கோ படத்தை விட நல்ல படமென்று கூறினார். மேலும் இந்த படம் வெளியாகும்போது நானே களத்தில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் என்று கூறினார். 

மிஷ்கினின் இந்த பேச்சு,மேடை க்காக கொஞ்சம் ஓவராக பேசுவது போல் தோன்றிய நிலையில், அவர் மனதில் இருந்து தான் பேசியிருக்கார் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. 

Image result for baram movie

ஆமாம்..தற்போது படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பாரம் படத்திற்காக மிஷ்கின்  தனது சொந்த செலவில் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.  ஒரு தனியார் செய்தி நிறுவனம் மிஷ்கின் போஸ்டர்களை ஒட்டும் அந்த காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காட்சி வைரல் ஆவதுடன், மிஷ்கினின் இந்த செயல் தன்னை கண்கலங்க வைப்பதாக அந்த படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமியும் கூறியதாக சொல்லப்படுகிறது.

English Summary

'Poster' Sticky Director Mishkin ..! - Respect for art

Latest Articles

KOLNews