பிரபல பாலிவுட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
தற்போது பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் தான் அதிகம் இருக்கும் சூழல் உள்ளதால் , அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் பிரமாண்ட வீடு ஒன்றை அவர் வாங்கியுள்ளார்.
இன்னும் சில வாரங்களில் அவர் தனது முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது புதிய வீடானது மிக வசதியானதாக இருக்கும் வகையில் அதனை வாங்கியுள்ளார்.
20 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்ட அந்த வீட்டை 20 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி உள்ளனர். இந்திய மதிப்பில் இந்த வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.144 கோடி . மேலும், இந்த ஆடம்பர வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியலறைகள் உள்ளன.
அத்துடன் வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம், பொழுதுபோக்கிற்கான பவுலிங் அரங்கம், சினிமா தியேட்டர், பார் மற்றும் ரெஸ்டாரண்ட், கூடைப்பந்து விளையாடுவதற்கான உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் என சகல வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பிரியங்காவின் கணவர் நிக , திருமணத்தின் போது, நிக் 6.5 மில்லியன் டாலர் விலையில் ஒரு வீடு ஒன்றை வாங்கி இருந்தார். தற்போது அந்த வீட்டை 6.9 மில்லியன் டாலருக்கு அவர் விற்றுவிட்டார்.
அதற்குப் பதிலாக பிரியங்கா சோப்ரா இந்த வீட்டை வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நிக்ஜோன்ஸ் ரூ.3 கோடிக்கு ஆடம்பர சொகுசு காரை பிரியங்கா சோப்ராவுக்கு பரிசாக அளித்திருந்தது நினைவிருக்கலாம்.
English Summary
Priyanka Chopra's new home