KOLNews

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி..!

மாபெரும் வெற்றி பெற்ற எந்திரன், பேட்ட, படங்களுக்கு பிறகு ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாக்க இருக்கும் இப்படத்தை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, கடந்த 4-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், படம் நன்றாக வந்திருப்பதாக பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், அவர் தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த நிலையில், தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இப்படம் ரஜினியின் 168-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இயக்குனர் சிவா நடிகர் அஜித்தை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினியுடனான இவரின் இந்த கூட்டணியும் அதிக அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.

English Summary

Rajini again in Sun Pictures production

Latest Articles

KOLNews