கோவா. பனாஜியில் துவங்கிய 50வது இந்தியன் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு ‛கோல்டன் ஐகான்' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. நடிகர் அமிதாப் பச்சன் இதை வழங்கினார்.
விழாவில் விருதை பெற்ற ரஜினிகாந்த் பேசுகையில், ‛‛இந்த விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. இதை அளித்த இந்திய அரசிற்கு நன்றி. என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார்.
44 வருடங்களாக திரைத்துறையில் இருப்பதுடன், மிக நீண்ட காலமாக உச்ச நட்சத்திரமாக நிலைத்து வரும் ரஜினிக்கு இந்த விருது பொருத்தமானதே. என அவர் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதே சமயத்தில் அவரை விட திரையுலகத்தில் பல சாதனைகளுடன் வலம் வரும் கமல் ஹாசனுக்கு வழங்கப்படாது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும் நேற்றைய பொழுதில் இருந்து தமிழக அரசியலில் ரஜினியும் கமலும் சேர்ந்து பயணிக்கும் சூழல் உருவாகலாம் என்கிற நிலையையடுத்து, இந்த விருது குறித்த வாதங்கள் சமூகவலைத்தளங்களில் அடக்கிவாசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rajini got Golden Jubilee Icon Award