KOLNews

''ரஜினிகாந்துக்கு விருது'' - ரசிகர்களை குஷிப்படுத்திய மத்திய அரசு அறிவிப்பு..!

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில் வைத்து வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படவிருக்கிறது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். 

வருடந்தோரும் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு நவம்பர் 20-ம்தேதி தொடங்கி 28-ம்தேதி வரையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 

மேலும், சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. அதில் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவில்  நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேபோன்று பிரான்ஸ் நடிகர் இஸ்பெல் ஹப்பெர்ட்டுக்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட உள்ளது. 

இந்தாண்டு நடைபெறும் விழா  50-வது சர்வதேச விழா என்பது கூடுதல் சிறப்பு. இதனை முன்னிட்டு பெண்கள் பங்களிப்பு செய்த 50 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

English Summary

Rajinikanth Award - Central Government Announces

Latest Articles

KOLNews