KOLNews

ரஜினியின் புதிய படத்தின் பெயர் வெளியானது !

நடிகர் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை சிவா இயக்குகிறார்.  ரஜினியின் 168-வது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் வரிசையாக அஜித் படத்தை மட்டும் இயக்கி வந்த இயக்குனர் சிவா, தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 'தலைவர் 168' என்று அப்போதைக்குக் குறிப்பிடப்பட்ட இப்படத்துக்கு இசை - இமான். கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி போன்றோர் நடிக்கிறார்கள்.  

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கத்தில் சிறு விடியோ ஒன்றுடன் திங்கள் மாலை படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'அண்ணாத்த' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

English Summary

Rajini's new movie title released

Latest Articles

KOLNews