KOLNews

விமர்சனத்தை மீறி வசூலில் வாகை சூடும் சாஹோ..! - ரூ. 294 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு!

வசூல் சாதனை புரிந்த பாகுபலி திரைப்படத்திற்கு பின் நடிகர் பிரபாஸின் அதிகம் எதிர்பார்க்கபடபடம் சாஹோ. ரூ. 250 கோடியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி ஆகியோர் நடித்துள்ளார்கள். 

கடந்த வெள்ளியன்று வெளியான சாஹோ படத்துக்குக் எதிர்பார்த்த அளவிற்கு விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. ஆனால் அதையும் மீறி வசூலை அள்ளியுள்ளது சாஹோ படம். 

Image result for Saaho collects Rs. 294 crore officially announced

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது.

அதாவது, சாஹோ படம் கடந்த ஞாயிறு வரை, அதாவது முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 294 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே நிலை தொடரும்பட்சத்தில் சாஹோ படம் குறைந்தது ரூ. 400 கோடி வசூலையாவது  உலகளவில் ஈட்டும் என காத்திருக்கிறார்களாம் படக்குழுவினர்.

English Summary

Sahao collects Rs. 294 crores officially announced

Latest Articles

KOLNews