KOLNews

'சார்பட்டா பரம்பரை' ஒரு சினிமா ரசிகனின் பார்வையில்..

இந்தப் படத்தை ஒரு பொழுது போக்கு சினிமாகவே மட்டும் பார்த்து விமர்சனம் எழுதுவது கொஞ்சம் சிரமம்தான். இந்தப் படம் விளையாட்டு, வடசென்னை மக்களின் வாழ்வியல், எழுபதுகளின் குழப்பமான அரசியல் சூழல் என்ற பின் புலத்தின் ஊடாக ஒரு கதையை அமைத்து பொழுதுபோக்கு படத்தை எடுப்பது ரஞ்சித் போன்ற இயக்குநருக்கு மிக சவாலான காரியம். இந்தப் பின்னணியையும் மனதில் வைத்துதான் இப்படத்தை பார்க்க வேண்டி உள்ளது. 

தமிழில் விளையாட்டை மையமாகக் கொண்டு வரும் படங்கள் மிகக் குறைவு. நான் முதலில் பார்த்த படம் தமிழ் இயக்குநர் மௌலி தெலுங்கில் இயக்கி தமிழில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்ற 'அஸ்வினி'. இதில் அஸ்வினி நாச்சப்பாவே அந்த பாத்திரத்தை ஏற்று நடித்தார். இதுவரை வந்த தமிழ் விளையாட்டுப் படங்களின் கதை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர் தொழில் முறை கலைஞானாக இல்லாத ஒருவரை தேர்ந்தெடுத்து பயிற்றுவித்து இறுதியில் வெற்றி பெறுவதாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நாயகனே மீண்டெழுவதாக ஒரு க்ளிஷேயில் இருக்கும். 

'சார்பட்டா'வில் இது போன்ற க்ளிஷேக்கள் இல்லாமல் இருப்பதே பெரும் ஆறுதல். இந்தப் படத்தில் வரும் சொல்லாடலான பரம்பரை 'அணி' அல்லது ஆங்கிலச் சொல்லான legacy என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது வம்சம், சந்ததி என்று ஜாதிப் பெருமை பேசும் படமல்ல. சென்னையில் ஒரு காலகட்டம் வரையில் புகழ்பெற்ற விளையாட்டாக இருந்த தொழில் முறையல்லாத(Amateur) 'குத்துச்சண்டை' பற்றிய கதை. அதை விளையாடிய உழைக்கும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலோடு சேர்த்து நேர்தியாக எடுக்கப்பட்ட period dramaவே இப்படம். 

Pa Ranjith is into his second productionரஞ்சித்தின் detailing அசாத்தியமானது. ரங்கன் வாத்தியார், துரைக்கண்ணு வாத்தியார், பாக்ஸர்களின் நடிகர் தேர்வு, அவர்களின் உடலமொழி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் சொல்வதானால் படத்தில் வரும் ஒரு கதை மாந்தர் கூட தேவையற்றவர்கள் அல்ல. வாத்தியார் ரங்கனின் மருமகள், கபிலனின் நண்பன், இரண்டே காட்சிகளில் வரும் அந்த குடிகாரர், சில நிமிடங்கள் வரும் பீடி ராயப்பன், சார்பட்டா பரம்பரையில் ரங்கனுக்கு அடுத்த நிலையில் இருந்து பஞ்சாயத்து பேசுபவர் எல்லோரும் வடசென்னையின் அசலான மக்கள். படத்தில் வரும் பாத்திம் பற்றி தனிட் கட்டுரை கூட எழுதலாம். கபிலனின் அம்மா திடிரென கெவினை எதிர்த்து பேசும் ஆங்கிலம்.... ஆக நான் நேரில் நிதமும் கண்ட காட்சி. கூடுதலாக அவர் ஆங்கிலத்துடன் கலந்து உருதுதான் பேசுவார். பாத்திமா அம்மா மணந்து கொண்டது ஒரு ஆங்கிலோ இந்தியரை. 

விக்னேஷ்சிவனை கவர்ந்த டான்சிங் ரோஸ்! | Dinamalar

பாக்ஸர்களாக நடிக்கும் நடிகர்கள் தேர்வு அபாரம். கபிலன், மீரான், ராமன், வெம்புலி, டான்ஸிங் ரோஸ் இவர்கள் நடிக்கிறார்கள் என்றே சொல்ல முடியவில்லை. அதுவும் அந்த டான்ஸிங் ரோசை ரிங்கின் உள்ளே விட வெளியே அவர் போட்டிருக்கும் உடை, சிகை அலங்காரம், பேசும் வடசென்னை மொழி எல்லாம் கவனித்தால் ஒரு அரசியல் தெரியும். இந்தப் படம் வடசென்னை மக்களை ரவுடிகளாக, குடிகாரர்களாக, சமூக விரோதிகளாக காண்பிக்கவில்லை. 

ஆனால் பின்னால் எந்த அரசியல் அதற்கான அடித்தளத்தை வித்திட்டது என்பதை subtext ஆக வைத்துள்ளார். உண்மையில் ஒடுக்கப்பட்ட அவர்களுக்கு கல்வி என்பது எளிதாக கிடைக்கும் வசதி இல்லாத பொழுது இது போன்ற விளையாட்டுகள் மூலம் பெறும் நிரந்தர வேலைகள் மூலம் தங்கள் வாழ்வியலை மேம்படுத்திக் கொள்ளவே முற்பட்டுள்ளனர். 

விளையாட்டு அந்த மக்களை எப்படி கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தது என்பதை பல காட்சிகளில் சொல்லியிருக்கிறார்.

Sarpatta Parambarai Photos & Images # 6004 - Filmibeat Tamilபோட்டிக்கு சில நாட்கள்வரை மனைவியுடன் கூடுவதை கூட தவிர்க்க வேண்டும் என்று பீடி ராயப்பன் மூலம் காட்சிப் படுத்துகிறார். விளையாட்டில் உணர்ச்சி வயப்படுதல் அதன் தன்மையை மாற்றிவிடும். பசுபதி உணர்ச்சிவயப் பட்டு சவாலிட விளையாட்டு வெறியாக மாறுகிறது. அது போல வெம்புலியும், டான்ஸிங் ரோஸும் சவாலிடும்பொழுது இடியப்ப பரம்பரை வாத்தியார் துரைக்கண்ணூவின் முகமொழியைப் பாருங்கள். அது மிக இயல்பாக ஒரு அசூயை காண்பிக்கும். 

படத்தில் குறைகளே இல்லையா? உண்டு. இதை ஒரு வெறும் விளையாட்டுப் படமாக மட்டும் ரஞ்சித் எடுக்கவில்லை. முதல் பத்தியில சொல்லி உள்ளதைப் போல வடசென்னை மக்களின் வாழ்வியல், அன்றைய அரசியலோடு அவரது அரசியல் நிலபாட்டையும் சேர்த்தே எடுத்து உள்ளார். இதையும் சேர்த்து பார்க்கையில் திரைக்கதை இன்னும் இறுக்கமாக இருந்திருக்க வேண்டும். அந்த வகையில் வெம்புலியுடன் நடக்கும் முதல் போட்டியில் கபிலன் வெற்றி பெறும் பொழுதே படம் முடிந்து விடுகிறது. இறுதியில் மீண்டும் கபிலன்தான் வெற்றி பெறுவான் அதுவும் அவன் மிகவும் மதிக்கும் வாத்தியார் ரங்கனின் வரவுக்குப்பின் என்பதெல்லாம் எளிதாக கணிக்கக் கூடிய க்ளைமேக்ஸ் காட்சி. 

மாறாக டான்ஸிங் ரோசை வெற்றி கொண்ட பிறகு ஏற்படும் சில அரசியல் தடைகளால் வெம்புலியுடனான போட்டியை கடைசியாக தள்ளி வைத்து இடையில் கபிலன் தடம் மாறுவதை போல திரைக்கதை அமைத்திருக்கலாம். பின் அதிலிருந்து மீண்டு வெம்புலியை வெற்றி பெறும் க்ளைமேக்ஸ் காட்சியை வைத்து இருந்தால் படத்தின் தொய்வை தவிர்த்து இருக்கலாம். 

எழுபதுகளின் பதின் பருவத்தில் இருந்த என் போன்றவர்களுக்கு படம் அந்த உணர்வைக் கடத்தவில்லை. அந்த மின்ட், வியாசர்பாடி பகுதிகளோடு செட் அமைப்பதை நிறுத்தி விட்டார்கள். அது கூட அவ்வளவு சிறப்பாக இல்லை. கொரோனா நெருக்கடியா அல்லது பட்ஜெட் பிரச்சினையா என்று தெரியவில்லை. அன்றைய சென்னை மொழி கூட அவ்வளவு சரியாகக் கையாளப் படவில்லை. குறிப்பாக இசைத் தொகுப்பின் மூலம் கூட இதைக் கொண்டு வந்து இருக்கலாம். அதுவும் இல்லை. 

இந்தப் படம் எடுப்பதற்காக ரஞ்சித் அந்த காலத்தின் சென்னை பற்றிய சரியான ஊடக ஆவணங்களை தேடுவதற்கு மிகவும் சிரமப்பட்டதாகக் கேள்விப் பட்டேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் பற்றி சரியான பதிவுகள் கூட இங்கில்லை என்பது நாம் எவ்வளவு வரலாற்று சுரணயற்றவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் செவுளில் அறைவாங்கி தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.​

Sarpatta Parambarai Photos & Images # 6002 - Filmibeat Tamil

இறுதியாக இந்தப் படத்தில் அரசியல் உள்ளாதா? கண்டிப்பாக உள்ளது. சார்பட்டாவை 'மெட்ராஸ்' படத்தின் prequel ஆகவே நான் பார்க்கிறேன். இந்தப் படம் எழுபதுகளில் 1975 எமர்ஜென்சிக்கு சற்று முன் தொடங்கி பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் மூன்றிலிருந்து நான்காண்டுகளுக்கள் நடக்கும் நிகழ்வுகளே படம். இந்த இரண்டு கட்சிகளின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய இம்மக்கள் எவ்வாறு மாற்றப்படுகிறார்கள் என்று கட்சி பேதமின்றி ரஞ்சித் விமர்சனத்தை வைக்கிறார். 'மெட்ராஸ்' படத்தில் இதன் அரசியல் தொடர்ச்சி இருந்தாலும் கல்வி அவர்களை எப்படி வேறு பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பதை சொல்ல முற்படுகிறார். இந்த எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்நிறுத்தி நுட்பமாக படம் எடுக்கும் ரஞ்சித் இன்று ஒரு இயக்கமாக மாறி வருகிறார். அது தமிழ் சினிமாவிற்கு இன்று தேவையான ஒன்று. 

இது எல்லோருக்குமான பாடம். திரையரங்கில் பார்த்திருந்தால் கிடைக்கும் அனுபவம் இன்னும் பன்மடங்காக இருந்திருக்கும். 

Everyone missed that experience.

விமர்சகர் - பார்த்திபன் இரத்தினவேலு.

English Summary

'Sarbatta Paramparai' in the view of a cinema fan ..

Latest Articles

KOLNews