KOLNews

சஸ்பென்ஸ்.? - 'சைலன்ஸ' திரை பட விமர்சனம்

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், மாதவன், அஞ்சலி, அனுஷ்கா நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'சைலன்ஸ் ' . .படத்தின் ட்ரைலரை பார்த்து ஆங்கில படத்திற்கு இணையாக இருக்கும் என  எதிர்பார்த்தால், அந்த எதிர்பார்ப்பை பாதி அளவுக்கு மட்டுமே பூர்த்தி செய்கிறது படம்.

கதை களம் அமெரிக்காவாக இருப்பதாலும், இசையிலும் (கோபி சுந்தர்) ஆங்கில திகில் பட சாயல் இருப்பதாலும் , சில கதாபாத்திரங்கள் அமெரிக்கர்களாக இருப்பதாலும் ஆங்கில படம் மாதிரி இருப்பதாக நினைத்து கொள்ளலாம். இருப்பினும் கதையில் உள்ள 'சஸ்பென்ஸ்' ,படத்தின் பாதியிலேயே ஒரு சராசரி ரசிகனால் கணித்துவிட முடிவது, திரைக்கதையில் ஒரு மைனஸ்.  

இது போன்ற துப்பறியும் படங்களில் நாம் சந்தேகப்படும் நபர் குற்றவாளியாக இருக்கமாட்டார் என்கிற புரிதல் தமிழ் ரசிகனுக்கு வந்து பல காலம் ஆகிவிட்டதை இயக்குனர் (ஹேமந்த் மதுக்கர்) உணராதது போல் தெரிகிறது. மற்றபடி தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை உணர்ந்து அனைவரும் கச்சிதமாக நடித்திருப்பது பாராட்டுக்குரியது.   காது கேளாததோடு ஊமையாகவும் நடித்திருக்கும் அனுஷ்கா, தனது கதாபாத்திரம் பேசப்படவேண்டும் எனும் ஆர்வக்கோளாறில் 'ஓவர் ஆக்ட்டிங்'; செய்யாமல்  அளவாக நடித்துள்ளார். அதே போல் துப்பறியும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அஞ்சலியும் கதைக்கு தேவையான அளவிலேயே நடித்திருப்பது, நடிப்பில் அவரது முதிர்ச்சியை காட்டுகிறது. மாதவன் வழக்கம் போல் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார்.

உளவியல் பார்வையில் கதாபாத்திரங்களை கட்டமைக்க பாடுபட்டிருக்கும் இயக்குனர், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் திருப்பங்களை தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் ஓடிடி தலத்தில் வீட்டிலிருந்தே படத்தை பார்க்கும் போது அவ்வளவு ஏமாற்றத்தை கொடுக்காது இந்த படம். 'ஒரு முறை பார்க்கலாம என விமர்சிக்கபடும்  படங்களில் இதுவும் ஒன்ராக அமையும்.

English Summary

Suspense.? - 'Silence' Film Review

Latest Articles

KOLNews