KOLNews

தமிழ் திரைப்பட துறைக்கு ரூ. 2.70 கோடி மதிப்பில் உதவி பொருட்கள்..! - உயர்ந்து கொண்டே இருக்கும் அமிதாப் பச்சன்..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர் தான், என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார். 

ஆமாம், தமிழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 2.70 கோடி மதிப்புடைய உதவி பொருட்கள் அவர் சார்பாக கிடைத்துள்ளதாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்

 முன்னதாக சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சந்தித்துப் பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி, பின்பு செய்தியாளர்களிடம் பேசியபோது நடிகர் அமிதாபச்சன் செய்த உதவியை உறுதிப்படுத்தினார். 

R K Selvamani - Alchetron, The Free Social Encyclopedia

அவர் கூறியதாவது - 

"எங்களுடைய திரைப்பட தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் நல வாரியம் மூலமாக அரசு ரூபாய் 1000 அளித்துள்ளது மீண்டும் ரூபாய் ஆயிரம் நிதி உதவி அறிவித்துள்ளார்கள் திரைப்பட கலைஞர்கள் மூலமாக நாங்கள் ரூபாய் 3.50 கோடி நிதி திரட்டி உள்ள எல்லா உறுப்பினர்களுக்கும் 25 கிலோ கொண்ட அரிசி மூட்டையும் ரூபாய் 500 பணமும் முதலில் அளித்தோம்

அதன் பின், அமிதாபச்சன் மூலமாக செய்த முயற்சியில் 18000 உறுப்பினர்களுக்கு தலா ரூபாய் 1500 மதிப்புள்ள பிக் பஸார் கூப்பன்களை இரு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 2.70 கோடி. அந்த கூப்பன்களை கொண்டு தேவையான பொருட்களை உறுப்பினர்கள் வாங்கிக்கொள்ளலாம் .இன்னும் சிறிது நிதி திரட்டி அதைக் கொண்டு எல்லா உறுப்பினர்களுக்கும் ரூபாய் 100 மதிப்புள்ள மளிகைப் பொருட்களும் 10  அல்லது 5 கிலோ அரிசியும், மூன்றாவது முறையாக வழங்க உள்ளோம். இரண்டு மாதங்களாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உதவி செய்தோம் ஆனால் மேலும் இதை தொடர்வது கடினமாக உள்ளதால் படப்பிடிப்புகள் தொடர்ந்தால் சுலபமாக இருக்கும்", என்றார்

நடிகர் அமிதாபச்சன் இதேபோல் தெலுங்கு திரையுலகுக்கு ரூபாய் 1.50 கோடி மதிப்புள்ள 12000 பிக் பஸார் கூப்பன்களையும்,  பாலிவுட் திரையுலகிற்கு ரூபாய் 15 கோடி மதிப்பு கொண்ட ஒரு லட்சம் கொரானா நிவாரண கூப்பன்களை திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

Tamil film industry gets Rs. 2.70 crores worth of assistance items! - Amitabh Bachchan on the rise ..!

Latest Articles

KOLNews