KOLNews

கதவை பூட்டி ..நடிக்க சம்மதிக்க வைத்தார்கள்..! - நடிகை ராணி முகர்ஜி அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகை, ராணி முகர்ஜி, இவர் தமிழில் நடிகர் கமல் ஹாசனுடன் 'ஹே ராம்' படத்தில் நடித்தவர். 

அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்று இந்தி திரையுலகில் உள்ள தயாரிப்பாளர்களின் ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துவிட்டது.

பல நடிகைகள், ஒரு படத்தில் தங்கள் நடிப்பதற்கான உண்மையான காரணங்களை வெளியில் சொல்வதில் என்கிற நிலையில்  ராணி முகர்ஜி, முன்பு தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை தற்போது போட்டுடைத்துவிட்டார்.

அதாவது, 'முஜ்சே தோஸ்தி கரோகே; படத்திற்குப் பிறகு தான் வேலை இல்லாமல் 8 மாதங்கள் சும்மா இருந்ததாகவும், தனது கெரியர் முடிந்துவிட்டது, ராணி அவ்வளவு தான் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்தார்கள்.அந்த சூழ்நிலையில் தான் 'சாத்தியா' பட வாய்ப்பு வந்தது. சாத்தியாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்க என் பெற்றோர் யாஷ் சோப்ராவைச் சந்திக்கச் சென்றார்கள். 

ஆனால்.,யாஷ் சோப்ராவோ தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களை வெளியே விடுவேன் என்றதால் நான் சாத்தியாவில் நடித்தேன்;  என தெரிவித்துள்ளார் ராணி முகர்ஜி.

மிகப்பெரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான யாஷ் சோப்ரா பற்றி துணிச்சலாக ராணி முகர்ஜி.கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேறு எந்த நடிகையாவது வாயை திறப்பார்களோ.? என்கிற கிளையில் இந்தி பட தயாரிப்பாளர்கள் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

English Summary

The door was locked.. they make me agreed to act ..! - Actress Rani Mukherjee shocking information

Latest Articles

KOLNews