KOLNews

சோகத்தில் இசை உலகம்..! - பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 69.

1950-ம் ஆண்டு,கர்நாடகா மாநிலம் பந்த்வால் அருகே உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத் தொட்டவர் கத்ரி கோபால்நாத்.

தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ போன்ற  விருதுகளைப் பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரெஹ்மான் இசையில் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

அதன் பிறகே சாமானிய ரசிகனுக்கு  சாக்சபோன் இசைக்கருவி பற்றி அதிகம் தெரியப்பட்டது. 

வயலின் இசைக்கருவிக்கு எப்படி குன்னக்குடி வைத்தியநாதன் இருந்தாரோ,  அதே போல சாக்சபோன் இசைக்கருவிக்கு கத்ரி கோபால்நாத் அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கத்ரி கோபால்நாத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த சில மாதங்களாக மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.

கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகந்த் கத்ரி, இசை அமைப்பாளராக உள்ளார். மற்றொரு மகன் குவைத்தில் இருக்கிறார். கர்நாடகாவின் பாதவிங்கடி என்ற இடத்தில் கத்ரி கோபால்நாத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  கத்ரி கோபால்நாத் மறைவுக்கு திரைபிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Image result for modi sad

அதே போல  கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கர்நாடக சங்கீத துறையில் கத்ரி கோபால்நாத்தின் பங்கு மிகப்பெரியது என தெரிவித்துள்ளார்.

English Summary

The music world in tragedy ..! - Famous saxophone musician Kadri Gopalnath has passed away

Latest Articles

KOLNews