KOLNews

இன்று முதல் திரையரங்குகள் திறப்பு..! - 7 மாதங்களுக்கு பின் வெள்ளித்திரை தரிசனம் .

கொரோனா தாக்கம்  காரணமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடஙகயடுத்து கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.  அதன் பின்,  ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் நிலைமைக்கு தக்கவாறு தொடர்ந்து  தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், தமிழகத்தில் 50 சதவீத இருக்‌கை வசதிகளுடன் நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி இன்று முதல் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. புதுப்படங்கள் வெளியிடப்படாது என்றும், பழைய படங்க‍ளே திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் புதிய படங்கள் ரீலீஸாகலாம் என்கிற எதிர்பார்ப்பில், ரசிகர்களும், திரைத்துறையினரும் காத்திருக்கின்றனர்.

English Summary

Theaters open from today ..! - Silver screen vision after 7 months.

Latest Articles

KOLNews