KOLNews

பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது..! - சேரனை வெளியேற கோரும் இயக்குநர் வசந்த பாலன்..!

தற்போது விஜய் டிவியில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது அதிகமாக விமர்சிக்க பட்டாலும் அதிகமான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது திகழ்கிறது . 

இந்த நிகழ்ச்சியின்  சிறப்பம்சமாக பார்க்கப்படுவது, இதில் கலந்து கொள்பவர்கள் தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருக்க வேண்டும் என்கிற விதிப்படி நடத்தப்படுவார்கள் என்பது தான்.

சென்ற இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த சர்ச்சைகள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

அந்த வகையில், தற்போது நடந்து வரும் நிகழ்ச்சியில் , பிக் பாஸ் இல்லத்தை விட்டு இயக்குநர் சேரன் வெளியேற வேண்டும் என்று இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சேரன் - நடிகர் சரவணன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதில் சரவணன் தன்னை மரியாதைக்குறைவாகப் பேசியதாக வருத்தப்பட்டார் சேரன். 

இந்நிலையில் இது குறித்து இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பதிவில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்...

அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்தச் செய்தி ஊடேறி உங்களைத் தொடும் என்றே நம்புகிறேன்.

உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப் படைப்புகள்.

திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது.

இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.

பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய...

உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்டபோது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்

என அந்த பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

English Summary

Those in the Big Boss are not aware of your height ..! - Director Vasantha Balan asks Cheran to quit

Latest Articles

KOLNews