KOLNews

பாலா இயக்கத்தில் உதயநிதி-அருள்நிதி..? - எகிறும் எதிர்பார்ப்பு..!

என்ன தான் பெரிய இடத்து பிள்ளைகளாக இருந்தாலும், 5 சண்டை, 6 பாட்டு பாடி ,கரம் மசாலா படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் காலூன்ற முயலாத இருவர், உதயநிதி ஸ்டாலினும், அருள்நிதியும். 

இது வரை இருவர் நடித்த படங்களின் வரிசையை பார்த்தாலே, மிக கவனமாக வெவ்வேறான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். இதில் உதயநிதி, ஆரம்பத்தில் 2 படங்கள் நகைச்சுவையை முன்னிறுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, பின், திமிர், மனிதன் என் தரமான கதைகளை தேர்வு செய்தார். அருள்நிதியும் சஸ்பென்ஸ், மற்றும் கிராமிய படங்கள் என வெவ்வேறான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததுடன்,ஸ்க்ரிப்டுகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர் என ஏற்கனவே பெயர் பெற்றவர். 

சித்தப்பா, பெரியப்பா மகன்களான இவர்களின் சினிமா பயணம் சீராக சென்று கொண்டிருக்கும் நிலையில், 

தற்போது பிரபல இயக்குநரான பாலாவின் இயக்கத்தில் இருவரும் நடிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 

The Bala Effect: On His Birthday, An Analysis Of the Universe He Creates On  Screen

இயக்குனர் பாலாவின் சரித்திரத்தை பார்த்தால், நடிகர்கள்  விக்ரம், சூர்யா, ஆர்யா, போன்றவர்களுக்கு பெரும் திருப்புமுனை படங்களை தந்தவர். இந்நிலையில் சகோதர்களை வைத்து இவர் படம் எடுக்கும் பட்சத்தில், இன்னும் கூடுதலான உயரங்களை அவர்கள் தொடக்கூடும். அதே நேரத்தில் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் சுழலில், பாலாவும் அதற்கேற்றாற் போல் ஒரு அற்புத படைப்பை தான் தருவார் என்பதிலும் சந்தேகமில்லை. 

இதற்கிடையே உதயநிதி, , 'கண்ணை நம்பாதே', 'ஏஞ்சல்', மற்றும் 'ஆர்டிகிள் 15 ரீமேக்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், பாலா இயக்கத்தில் சகோதரர்கள் உதயநிதியும், அருள்நிதியும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை, பாலாவின் பி ஸ்டூடியோஸ்சே  தயாரிப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

English Summary

Udayanithi-Arulnithi in Bala's Direction ..? - Expectation to rise ..!

Latest Articles

KOLNews