மறைந்த இலக்கிய எழுத்தாளர் சி சு செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவலைத் தழுவி பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கு நடிகர் சூர்யாவை ஒப்பந்தம் செய்யப்பட்டதும் அதை தாணு தயாரிப்பதும் தெரிந்ததே...
இதற்கிடையே வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு சூரி நடிப்பில் ஒரு படம் மற்றும் தனுஷ் நடிக்க உள்ள படம் ஆகியவற்றை முடித்த இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் தான் தாணுவின் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றை தொடங்கி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்திகளை பரப்பினார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விளக்கமளித்துள்ளார்.வதந்திகளை பரப்பிய அந்த குறிப்பிட்ட போலி ட்விட்டர் கணக்கு டேக் செய்து தயாரிப்பாளர் தாணு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

'இந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். எண்ணியதை எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் வலம் வரும்.. வாகை சூடும்..!, என பதிவிட்டுள்ளார். தாணுவின் இந்த பதிவை கண்டு சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Vadi vaasal will come and get Victory...! - Surya fans happy with Dhanu's tweet