KOLNews

வெற்றிமாறனின் “விடுதலை”.! - சூரியுடன் இணையும் விஜய் சேதுபதி

நடிகர் ரஜினியின்  படத்தின் தலைப்புகள் மீண்டும் புதிய படங்களுக்கு அவ்வப்போது வைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது 'விடுதலை' என்கிற தலைப்புடன்,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. 

இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்கிறார்.எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். ஆர்.எஸ் இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்..படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குனராகவும், ஜாக்கி கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் கூடுதலான சிறப்பம்சம்,  இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதியும் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தான்.  ,அவரது கதாபாத்திரம் குறித்து பர்ஸ்ட்லுக்கில் வாத்தியார் என குறிப்பிடப்பட்டுள்ளது.பர்ஸ்ட்லுக்கில் நடிகர் சூரி காவலராகவும்,விஜய்சேதுபதி கைதியாகவும் உள்ளனர்.

Vijay Sethupathi, Soori and Vetri Maaran's Viduthalai first-look posters  out - Movies News

இது தொடர்பாக சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் அண்ணனுக்கும் இசைஞானி ஐயா இளையராஜா அவர்களுக்கும்,எல்ரெட்குமார் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.புதிய பரிமாணத்தில் மாமா விஜய்சேதுபதி அவர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி”என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன்,இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா,நடிகர் விஜய்சேதுபதி என மூவர் கூட்டணியுடன் சூரி இணைந்துள்ளது,படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்க வைத்துள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் வைரலாகி ஆகி வருகிறது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்..

English Summary

Vetri Maran's Viduthalai ! - Vijay Sethupathi joins Suri

Latest Articles

KOLNews