KOLNews

'வேட்டை மன்னன்' - சிம்பு சொல்லும் சேதி..!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள 'மாநாடு' திரைப்படம்  சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வரும் நவ -25 ம் தேதி அன்று வெளியாக உள்ளது தெரிந்ததே..

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இதன் பிரீ புரமோஷன் நிகழ்ச்சியில் , எனது பிரெச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை நீங்கள் (ரசிகர்கள்) பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி சிம்பு கண் கலங்கியது பெரும் செய்தியாகி படத்தை பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. 

இதற்கிடையே, கடந்த பத்து வருடங்களுக்கு கைவிடப்பட்ட 'வேட்டை மன்னன்' படம் குறித்து பேசியுள்ள சிம்பு  " வேட்டை மன்னன் படம் கிட்டத்தட்ட ஒரு கல்ட் கிளாசிக் படம் . அந்தப்படத்தை அப்போது செய்தால் சரியாக இருக்காது என அதை நிறுத்திவிட்டோம் . நெல்சன் திலீப்குமார் திறமையான இயக்குனர் . அவருடைய டாக்டர் படத்தில் ஓர்க் அவுட் ஆன டார்க் காமெடியை ரசித்தேன் ஆனால் வேட்டை மன்னன் படத்தின் டார்க் காமெடியில் பத்து சதவீதம் கூடடாக்டரில் இல்லை என்றுதான் சொல்வேன் " என தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் 'வேட்டை மன்னன்' மீண்டும் உயிர்பெறும் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.

English Summary

'Vettai Mannan' - Simbu's info ..!

Latest Articles

KOLNews