KOLNews

"செல்பி புள்ள'" பாடலை விட பெரிய ஹிட்டுக்கு ரெடியாகும் விஜய் -அனிருத் கூட்டணி

சமீபத்தில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த  'பிகில்' திரைப்படம் வணிக ரீதியான வெற்றியைப்பெற்ற நிலையில்,   'மாநகரம்', 'கைதி' உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

இது விஜய்யின் 64வது படம் ,

 டெல்லியில், இந்தப் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனன் நடித்து வருகிறார். 

Image result for vijay anirudh

அத்துடன், அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடவுள்ளதாக ஒரு கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அனிருத் இசையில் 'கத்தி' படத்தில் "செல்பி புள்ள'" பாடலை விஜய் பாடி சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகி விஜய் ரசிகர்களை 'குஷி' படுத்தும் என தெரிகிறது. 

English Summary

Vijay-Anirudh Alliance is ready for a bigger hit than the song "Selfie Pulla"

Latest Articles

KOLNews