KOLNews

வம்சி இயக்கத்தில் விஜய் ..?

கொரோன முதல் அலையின் போது அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் பின் தியேட்டர்களில் திரைப்படங்களை வெளியிட பலரும் தயங்கிய நிலையில் வந்த நடிகர் விஜயின் 'மாஸ்டர்; திரைப்படம் பெரும் வசூலை குவித்து சாதனை படைத்தது.  

அதன் வெற்றிக்கு பின் தொடர்ந்து சினிமாக்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா 2வது அலையால் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நடிகர் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் . 

இதற்கிடையே அவரின் அடுத்த படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. கார்த்தி , நாகார்ஜுனா இணைந்து நடித்த  தோழா படத்தை இயக்கியவர் பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி. விஜய்யின் அடுத்த படத்தை இவர் தான் இயக்கவுள்ளார் . இது பற்றி , தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் உறுதி செய்துள்ளார் . கொரோனா ஊரடகிற்கு பின் இதுபற்றிய செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் . விஜய் வம்சி இணையும் படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார் . விஜய் 66 படம் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது . 

English Summary

Vijay in Vamsy's Direction ..?

Latest Articles

KOLNews