KOLNews

விஜய் எதிர்ப்பாளர்களை கலாய்த்த விஜய் சேதுபதி..! - வைரலாகும் ட்விட்டர் பதிவு

விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பக்கங்களில், வைரலாக பரவி வரும் நடிகர் விஜய் போலியான தகவல் பகிரப்பட்டிருந்தது. அத்துடன் அதற்கு எதிர்வினையாக தன்  கருத்தையும் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

மெர்சல் படத்தில் இடம் பெற்ற சில வசனங்கள், மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சிப்பதாக எழுந்த பிரச்னையை அடுத்து, பாஜக  மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் நடிகர் விஜய் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். 

Image result for vijay in mersal

குறிப்பாக அவரை மதம் சார்ந்து அடையாளப்படுத்துவதும் , தனிப்பட்ட விஷயங்களை குறிப்பிட்டு கேலி செய்வது வருவதும் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் விஜய் குறித்து  அது போன்ற ஒரு போலி செய்தி பதிவிட்டு பரப்பப்பட்டது.  

இதைத்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா,” என்று அவர் பாணியில் கலாய்த்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யிடம் சமீபத்தில் வருமான வரித் துறை விசாரணை நடந்தது. அவரது வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. விஜய் நடித்து ஹிட் அடித்த ‘பிகில்' திரைப்படத்தில் அவர் எவ்வளவு ஊதியம் பெற்றார் மற்றும் சமீபத்தில் அவர் வாங்கிய சொத்துகள் பற்றி இந்த சோதனையின்  போது விசாரணை செய்யப்பட்டதாக தெரிகிறது. 

English Summary

Vijay Sethupathi on Vijay Haters

Latest Articles

KOLNews