KOLNews

விலகினார் விஜய் சேதுபதி.? - முற்றுப்புள்ளி வைத்த முத்தையா முரளிதரன்.

தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்ததுதான் ஆளும் சிங்கள அரசுக்கு ஆதரவான நிலையை எடுத்தவர் முத்தையா முரளிதரன், ஆகவே அவரது  வாழ்க்‍கை வரலாற்று திரைப்படமான 800 லிருந்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கவேண்டும் என தமிழகம் மட்டுமல்லாமல் , புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களாலும்  கோரிக்கை முன்வைக்கப்பட்டன. 

இந்த திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்‍க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்த நிலையில்  அவருக்‍கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்‍குகள் டிரெண்டாகி வந்தன. இந்நிலையில் இன்று இலங்கை செய்தி நிறுவனம் ஒன்றிற்கு விஜய் சேதுபதி அளித்த தொலைபேசி வாயிலான பேட்டியில், தான் இந்த படத்தில் இருந்து விலகப்போவதில்லை என உறுதியாக தெரிவித்தார். 

பேட்டி முடிந்த சிறிது நேரத்தில் தனது வாழ்க்‍கை வரலாறு படத்தில் நடிப்பதால் ஒரு நல்ல கலைஞன் பாதிக்‍கப்படக்‍கூடாது என்றும், எனவே இந்த படத்தில் இருந்து விலகுமாறு முத்தையா முரளிதரன் அறிக்‍கை ஒன்றை வெளியிட்டார். 

அதையடுத்து, முத்தையா முரளிதரனின் இந்த அறிக்‍கையை மேற்கோள்காட்டி நன்றி, வணக்‍கம் என விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார். எனவே அவர் 800 படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English Summary

Vijay Sethupathi resigns? - Muthiah Muralitharan put an end to it.

Latest Articles

KOLNews