KOLNews

விக்ரம். கமல்..! - பாதி இப்படி ..பாதி அப்படி..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில், கமல் ஹாசன்  போலீசாக நடித்து வருவது தெரிந்ததே..  இதன் படப்பிடிப்பு பணிகள் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மீண்டும் வேகமாக படமாக்கப்பட்டு  . வருகிறது.

முன்னதாக இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது . அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி , மலையாள நடிகர்கள் பகத் பாசில் , அந்தோணி வரலே , நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தில், விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . 

கமலுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவர் கடந்த 1981 - ம் ஆண்டு வெளியான ராக பாரவை படத்தில் கண் பாரவையற்றவராக நடித்திருந்தார்.  தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் படத்தில் பாதி வரை கண்பாரவை உளளவராகவும் பாதிக்கு மேல் பார்வையற்றவராகவும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

English Summary

Vikram. Kamal ..! - Half like this .. Half like that ..!

Latest Articles

KOLNews