KOLNews

விக்ரம்.. பழைய தலைப்பில் புதிய கமல்..!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமலின் 232 வது படமாக உருவாகும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசரை கமலின் பிறந்த நாளான நேற்று வெளியிட்டனர். 

கமல் , ஒரு வீட்டில் விதவிதமான ஆயுதங்களை பல இடங்களில் மறைத்து வைக்கிறார். அத்துடன் ஒரு பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கு அரசியல்வாதி போன்ற தோற்றம் கொண்டவர்களும் போலீசார் முகமூடி அணிந்தவர்களும்  பங்கேற்கிறார்கள், ஆரம்பிக்கலாமா என கமல் கேட்க அனைவரும் விருந்தை சுவைக்கும் நேரத்தில் மேஜைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கோடாரியை எடுத்து கமல் வீசுவதுடன் டீசர் முடிகிறது.

கமல் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்த தலைமுறையையும்  கவரம் விதத்தில் அமைந்துள்ள இந்த டீசர்  அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதை தெளிவாக்கிவிட்டது.  முதன் முறையாக கமல் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏற்கனவே 1986 ஆம் ஆண்டு மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் கதை வசனத்தில் கமல் தயாரித்து மறைந்த இயக்குனர் ராஜசேகர் தயாரித்து வெளியான படம் விக்ரம். அப்போது குமுதம் வார இதழில் நாவலாக வந்தது, அத்துடன் அதே நேரத்தில் திரைப்படமும் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்றாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

English Summary

Vikram .. New Kamal in the old title ..!

Latest Articles

KOLNews