KOLNews

நடிகர் அருண் பாண்டியனுக்கு என்ன ஆச்சு ..? - மகள் கீர்த்தி பாண்டியன் விளக்கம்

நடிகர், தயாரிப்பாளர், திரைப்பட விநியோகிஸ்தர் என திரையுலகில் பன்முக திறன் கொண்டவராக திகழ்பவர் அருண் பாண்டியன். 80களின் இறுதியில் திரைப்பட கல்லூரி மாணவர்களின் வருகை தமிழ் திரையை உலுக்கிய காலத்தில் வந்தவர். 

ஊமை விழிகளில் சராசரி இளைஞராக  தோண்றியஅவர், பின் ஆஜபாகுவான தோற்றத்தையுடைய நடிகராக மாறினார். இணைந்த கைகள் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர், பிந்தைய காலகட்டங்களில் திரை பட விநியோகிஸ்தராகவும், தயாரிப்பாளராவும் மாறினார். 

அண்மையில், அவரது மகள் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து அன்பிற்கினியாள்  என்கிற படத்தில் நடித்தார் . இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதுடன், இதய அடைப்பும் ஏற்பட்டதாகவும்  அவரது மகள் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.  அருண் பாண்டியனுக்கு இதயத்தில் இரு அடைப்பு இருந்ததை கண்டறிந்த நிலையில், நீரிழவு பிரச்னையும் உள்ளதால் கவனமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது கொரோனா மற்றும் இதய அடைப்பு பிரச்னையில் இருந்தும் அவர் மீண்டுள்ளார் என தெரிவித்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.

English Summary

What's happened to actor Arun Pandian? - Description of daughter Keerthi Pandian

Latest Articles

KOLNews