KOLNews

மீண்டும் சரித்திரம் படைப்பாரா நயன்தாரா..?

நயன் தாரா, ஆரம்ப காலகட்டங்களில் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் அதிகம் நடித்ததுடன், தெலுங்கு, தமிழ் , மற்றும் மலையாள திரை உலகத்தில் உள்ள முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வளம் வந்தார். 

பின்,  பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரை படங்களில் நடித்து, ஹீரோக்களுக்கு இணையான ஒரு இடத்தை பிடித்தார் நயன்தாரா.  

தொடர்ந்து வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர், ஏற்கனவே, 

ஸ்ரீராமராஜ்ஜியம், சைரா நரசிம்ம ரெட்டி போன்ற புராண சரித்திர கதைகளிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில், தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் மகிமைகளை சொல்லும் ‘மூக்குத்தி அம்மன்’ பக்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கன்னடத்தில் தயாராகும் ராஜவீர மடகாரி நாயகா என்ற சரித்திர கதையில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

தென்னக மொழிகளில் அதிகம் நடித்துள்ள நயன்தாரா, கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக சூப்பர் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த படம் 10 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. மீண்டும்  நீண்ட இடைவெளிக்கு பிறகு  கன்னடத்துக்கு போகிறார். இந்த படத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கிறார். சுமலதா, ரம்யா ஆகியோரும் நடிக்கின்றனர். ராஜேந்திர சிங் பாபு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

English Summary

Will Nayantara make histroy again?

Latest Articles

KOLNews