KOLNews

85 சதவீத கல்விக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்..! தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை உயர்நீதிமன்றம், தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது .

முன்னதாக,  கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று  விசாரணைக்கு வந்தது . 

அப்போது இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணகுமார் , நடப்பு கல்வியாண்டில் வருவாய் இழப்பு இல்லாத அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெற்றோர்களிடம் 85 சதவீத கட்டணத்தை 6 தவணைகளாக வருலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டதுடன், கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தை 5 தவணைகளாக வருவிக்க வேண்டும் எனவும் கட்டணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் கூடுதல் கட்டண சதுகை கோரி பள்ளிகளை கரும் பட்சத்தில் அதனை தனியார் பள்ளிகள் பரிசீலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார் 

மேலும், கட்டணம் செதுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கும் பாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு  உத்தரவிட்ட நீதிபதி, தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

English Summary

85% tuition fee can be collected ..! Chennai High Court allows private schools

Latest Articles

KOLNews